தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அனிகாவிற்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அஜித்துடன் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளாக அனிகா சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து ‘விஸ்வாசம்’ திரைப்படத்திலும் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தார். மேலும் நானும் ரவுடி தான்,மிருதன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் இணையத்தில் வெளியான அனிகாவின் விதவிதமான புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்தது. 15 வயதாகும் அனிகா கதாநாயகிகளுக்கு இணையாக எடுத்த போட்டோ ஷூட் அனைவரையும் வியக்க வைத்தது. இவர் எடுத்த முயற்சிக்கு பலனாக தற்போது இவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ‘கப்பேலா’ என்ற மலையாளத் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க அனிகா ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.