பனை ஓலை கொழுக்கட்டை செய்ய தேவையான பொருள்கள்:
பனை ஓலை(நடுப்பகுதி) – 15 (ஆறு அங்குலம்) துண்டுகள்
பச்சரிசி மாவு – 3 கப்
கருப்பட்டி – 2 கப்
ஏலக்காய் தூள் – 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி – 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 1 கப்
செய்முறை :
முதலில் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அதில் கருப்பட்டியை போட்டு, தேவையான அளவு தண்ணீரைச் சேர்த்து, நன்கு கொதிக்க வைத்து, காய்ச்சி கொள்ளவும். பின்பு தேங்காயை துருவி எடுத்து கொள்ளவும்.
அதன் பின்பு பாத்திரத்தில் பச்சரிசி மாவு, ஏலக்காய் தூள், சுக்குப்பொடி, தேங்காய்த்துருவல், காய்ச்சிய கருப்பட்டி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில், கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.
மேலும் பனை ஓலையை எடுத்து ஆறு அங்குலம் அளவுக்கு 15 துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
பின்னர் ஒவ்வொரு பனை ஓலை துண்டுகளாக எடுத்து, அதன் நடுவில் கெட்டியாக பிசைந்த மாவை சிறிதளவு வைத்ததும், அதை மற்றொரு ஓலையால் நன்கு அழுத்தி மூடி, ஓலை பிரியாமல் இருக்க சிறிய நார்களை வைத்து கட்டி கொள்ளவும்.
பின்பு அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து, அதில் தயார் செய்து வைத்துள்ள பனை ஓலை துண்டுகளை வைத்து 20 நிமிடங்கள் ஆவியில் நன்கு வேக வைத்து, எடுத்து பரிமாறினால் ருசியான பனை ஓலை கொழுக்கட்டை தயார்.