கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக சில மாதங்களுக்கு முன்பு வரை ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட்டது. போக்குவரத்து முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டதால், அந்த துறையும் பல துறைகளைப் போல நஷ்டத்தில் மூழ்கியது.
இந்நிலையில் இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து வாகனங்களுக்கான காலாண்டு வரியை அபராதம் இன்றி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டுக்கு நவம்பர் 30 வரையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டுக்கு டிசம்பர் 31 வரை அபராதமின்றி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமுடக்கம் காரணமாக போக்குவரத்து தொழில் வருவாயில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வரியை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.