விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கைதி படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன் முறையாக இணைந்து நடித்திருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன் மாஸ்டர் திரைப்படம் நெட்பிளிக்ஸ் அல்லது அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது என கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியானது. ஆனால் இது முற்றிலும் வதந்தி மட்டுமே என தயாரிப்பாளர்கள் சேவியர் பிரிட்டோ, லலித் குமார் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
மாஸ்டர் திரைப்பட தியேட்டரில் கான அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருப்பது அறிவோம். அந்த நாளுக்காக நாங்களும் காத்திருக்கிறோம். ஆனால் இதற்கிடையே சில நாட்களாக மாஸ்டர் பட ரிலீஸ் தொடர்பாக தவறான தகவல்கள் பரவி வருகிறது. அதையொட்டியே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. மாஸ்டர் படத்திற்கு முன்னணி ஓடிடி தளங்களிலிருந்து நல்லவிதமான ஆப்ர்கள் வந்தாலும், நாங்கள் படத்தை தியேட்டரில் வெளியிடுவதையே முக்கியத்துவம் அளித்துவருகிறோம். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடுவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.