சீன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் பரிணாமம் இந்தியாவில் தான் ஏற்பட்டுள்ளது என்று ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளனர்.
உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் covid-19 எனப்படும் கொரோனா வைரஸ் இந்த வருடம் முழுவதும் உலகத்தையே தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளது. சுமார் 14.5 லட்சம் பேர் இந்த வைரஸிற்கு பலியாகி உள்ளனர். சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றியதாக கருதப்படும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் Shangai Institute For Biological Sciences சேர்ந்த விஞ்ஞானிகள் தற்போது ஒரு புதிதாக ஒரு குண்டை போட்டுள்ளனர்.
அது என்னவென்றால், உலகையே ஆட்டி படித்துக்கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் இந்தியா அல்லது வங்கதேசத்தில் தான் தோன்றி இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். அவ் விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை கொரோனா வைரஸின் பரிணாமம் எது? என்றும் அது எப்படி பரவியது? என்றும் அலசி ஆராய்ந்து உள்ளது. அந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் இந்த கொரோனா வுகானில் தோன்றவில்லை என்பதை விஞ்ஞானிகள் அடித்துக் கூறுகின்றனர். வுகானில் இந்த வைரஸ் பரிமாற்றம் அடையவில்லை என்றும் கூறுகின்றனர்.
இதையடுத்து இந்த வைரஸ் பரிமாற்றம் இந்திய துணைக்கண்டத்தில் நிகழ்ந்திருக்கலாம் என்றும், வுகானுக்கு முன் இந்தியாவில் 4 மாதங்களுக்கு முன்னதாகவே இந்த நோய் பரவல் இருந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். சீன விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பை இந்திய விஞ்ஞானிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். மேலும் Shangai Institute For Biological Sciences விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் முற்றிலும் தவறாக உள்ளது என்று சவால் விடுத்துள்ளனர். வழக்கம்போல் இந்தியா மீது பழிபோடும் எண்ணத்திலேயே சீனா செயல்பட்டு கொண்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.