தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி 12 மணி நேரத்தில் உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்து தமிழகத்திற்கு அதிக மழையை கொடுத்த நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. நிவர் புயலை தொடர்ந்து மக்களுக்கு அடுத்து ஒரு எச்சரிக்கையாக இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.