உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி ஒரு புறம் பாஜகவின் வேல் யாத்திரை, மறுபுறம் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் என்று புயலுக்கு முன் தேர்தல் களம் அனல் பறந்தது.
இந்நிலையில் உதயநிதி பிரசாரத்தை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதவில்லை. வேல் யாத்திரைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கொள்ள முடியாமல்தான் உதயநிதி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார் என்று எல். முருகன் விமர்சித்துள்ளார்.