மத்திய அரசால் வழங்கப்படும் எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியத்தை இந்த வழிமுறையின் மூலம் காணலாம்.
எல்பிஜி எரிவாயு சிலிண்டர்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசால் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு சிலிண்டர் வீதம் 12 சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிக எண்ணிக்கையிலான சிலிண்டர்களை வாங்கினால் அதற்கு மானியம் கிடையாது. எனவே வாடிக்கையாளர் மானியம் இல்லாமல் அந்த கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டியது இருக்கும். இந்நிலையில் எல்பிஜி குறித்து வாடிக்கையாளர்கள் மனதில் பலவிதமான கேள்விகள் எழும்புகின்றது.
அதில் முக்கியமானது தங்கள் கணக்கில் எவ்வளவு பணம் மானியம் உள்ளது என்பது தான். உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்படுகிறது என்பதை இதன் மூலம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
அறிந்துகொள்ளும் வழிமுறகள்:
1.முதலில் Mylpg.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2.உங்கள் சிலிண்டர் நிறுவனத்தின்(HP கேஸ், பாரத் கேஸ் மற்றும் Indane ) பெயரை கிளிக் செய்ய வேண்டும்.
3.மெனுவுக்கு செல்வதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு புதிய இடைமுகம் திறக்கப்படும்.
4.உங்கள் 17 இலக்க LPG ஐடியை உள்ளீடு செய்யவும்.
5.எரிவாயு நிறுவனம் எல்பிஜி நுகர்வோர் ID (consumer id), மாநில மற்றும் விநியோகஸ்தரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணை உள்ளிடவும்.
6.கேப்ட்சாவை (captcha) உள்ளீடு செய்ய வேண்டும்.
7.பின்னர் செயல்முறை (process ) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
8.புதிய பக்கத்தில் நீங்கள் LPG ID யை காண்பீர்கள்.
9.இப்போது சிலிண்டர் முன்பதிவு வரலாறு அல்லது மானியத்தை காண்க(see cylinder booking history ஓர் subsidy transfer ) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
10.இப்போது நீங்கள் மானிய தொகையை காண முடியும்.