Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31 வரை… விமானங்கள் ரத்து… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

கொரோனா பரவலின் காரணமாக டிசம்பர் 31-ஆம் தேதி வரை விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலின் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது. தற்போது நவம்பர் 30ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. சில முக்கிய வழித்தடங்களில் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று விமானங்களை இயக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றினை விமான போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.

சர்வதேச விமான போக்குவரத்தை டிசம்பர் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு அனுமதி பெற்று இயங்க கூடிய சேவைகள் மட்டும் தொடரும் என்றும், இந்த ரத்து சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |