Categories
மாநில செய்திகள்

புயலால் பெரும் பாதிப்பு… நாளை மின்சாரம்… அமைச்சர் உறுதி…!!!

புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளைக்குள் மின்சாரம் சரி செய்யப்பட்டு விடும் என அமைச்சர் கூறியுள்ளார்

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் புயல் கரையை கடந்த போது பலத்த சூறை காற்று வீசியதால் ஏராளமான மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதனை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த இடங்களை அமைச்சர் தங்கமணி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நாளைக்குள் முழுமையாக மின்சாரம் சரி செய்யப்பட்டு விடும். தென் சென்னையில் மொத்தம் உள்ள 308 துணை மின் நிலையங்களில் 87 நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் தற்போது 50 நிலையங்கள் சரி செய்யப்பட்டுவிட்டது. மீதமுள்ள அனைத்து மின் நிலையங்களும் விரைவில் சரி செய்யப்பட்டு மாலை 5 மணிக்குள் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |