இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மக்களின் அலட்சிய போக்கால் கொரோனா அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு இரவு நேர ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் முழு ஊரடங்கு அமல் படுத்த மத்திய அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கையுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.