Categories
பல்சுவை வானிலை

புதுவையிலிருந்து 50 கிலோ மீட்டர்… 3 மணி நேரத்தில் இன்னும்… ”நிவர்” குறித்த புதிய அப்டேட் …!!

நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50கிலோ மீட்டர் தொலைவில் நிலப்பகுதியில் உள்ளது.

கரையை கடந்த நிவர் புயல் தற்போது புதுச்சேரியில் இருந்து 50 கிலோமீட்டர் வடமேற்கே நிலப்பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. நேற்று இரவு 11 30 மணியளவில் புதுச்சேரி அருகே கரையைக் கடக்க தொடங்கியது நிவர் புயல். அதி தீவிர புயலாக இருந்த நிலையில் சற்று குறைந்து கரையை கடக்க தொடங்கியிருந்தது. சரியாக அதிகாலை 2.30 மணிக்கு முழுவதுமாக புயல் கரையை கடந்தது.

மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சத்திலும், எச்சரிக்கை உணர்வோடு மிகுந்த சூழலில் பெரும்பாலான சேதத்தை ஏற்படுத்த வில்லை. ஆனால் பெரும் மழையை கொடுத்துள்ளது. தற்போது இதனால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருக்கும் நிலையை பார்க்க முடிகிறது.

கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் எல்லாம் நீர் தேங்கி அதனை அப்புறப்படுத்தும் பணிகளிலும் நடந்து கொண்டிருக்கின்றன. சென்னையிலும் பல்வேறு இடங்களில் தேங்கி இருக்கக்கூடிய நீரையே அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகின்றது. இந்நிலையில் கரையை கடந்த நிவர் புயல்  தற்போது புதுச்சேரியில் இருந்து 50 கிலோமீட்டர் வடமேற்கு நிலப் பகுதியில் நிலை கொண்டிருக்கிறது. நிவர் புயல் கரையை கடந்த நிலையில் தீவிரமாக புயலாக உள்ள நிலையில் மூன்று மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |