Categories
மாநில செய்திகள்

புயல் எதிரொலி… 286 செல்போன் கோபுரங்கள் சேதம்… தொடர்பு துண்டிப்பு…!!!

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் தற்போதுவரை 286 செல்போன் கோபுரங்கள் சேதமடைந்துள்ளன.

வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.

இந்நிலையில் புயல் காரணமாக காற்று பலமாக வீசுவதால் தற்போது வரை 286 செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். அதனால் பல்வேறு செல்போன் தொடர்பு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்திய கடற்படையின் 2 கப்பல்கள் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளதாகவும், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |