சென்னையில் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும்.
புயல் கரையை கடந்த நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து உள்ளன. பலத்த காற்று வீசியதால் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் கடலூர் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 10 ஆம் எண் புயல் கூண்டு இழக்கப்பட்டுள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் மின் இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.