வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே நேற்று இரவு கரையை கடந்தது.
வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்தன. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.
புயலால் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புயல் கரையை கடக்கும்போது 140 கிலோ மீட்டர் வேகத்தில் சூறை காற்று வீசியதால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.