Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இந்திய அணியில் வெற்றிடம்” இது உங்க டைம்…. திறமையை காட்டுங்க…. சச்சின் கருத்து…!!

இந்திய அணியில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா VS ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் போட்டி நாளை முதல் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டி அதிக அளவில் பலரால் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, தற்போது அமைந்துள்ள இந்திய அணி குறித்து பலரும் புகழ்ந்து பேசி வருகின்றனர். அதற்கு காரணம், அணியில் பெரும்பாலான இளைஞர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பதும், ஐபிஎல் போட்டியில் சிறந்த முறையில் performance’ செய்த வீரர்களை முறையாக பிசிசிஐ தேர்வு செய்ததும் தான்.

தற்போது இந்த அணி குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கடைசி மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய கேப்டன் விராட் கோலி அணியில் இல்லாதது மிகப்பெரிய வெற்றிடம், நிறைய திறமையாளர்கள் நம்மிடம் வெளியே உள்ளனர். எனவே இது பிற வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொள்ள சரியான சந்தர்ப்பமாக அமையும் என்று தெரிவித்த அவர், டெஸ்ட் போட்டியில் மயங் அகர்வால் அணியின் ஒப்பனராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார். 

Categories

Tech |