Categories
சினிமா தமிழ் சினிமா

“LIFE PARTNER GOALS” எனக்கு கிடைச்சிட்டு… உங்களுக்கும் கிடைக்கும்…. கனவு நாயகியின் உணர்ச்சி பதிவு….!!

சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தில் உள்ள பொம்மி கதாபாத்திரம் அனைவரது மனதையும் கவர்ந்தது. கதாநாயகனின் கனவை நிறைவேற்ற மிக தைரியமாக அவரை ஊக்கப்படுத்தும் கதாபாத்திரம்தான் பொம்மி. ஆனால், இந்த பொம்மி கதாபாத்திரத்தை விட மயக்கம் என்ன திரைப்படத்தில் வரும் யாமினி கதாபாத்திரம் மிகவும் வலிமையானது எனவும், அது போன்ற பெண் தான் எனக்கு வருங்கால துணையாக இருக்க வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் யாமினி கதாபாத்திரம் குறித்த கருத்துக்கள் அதிகமாக வலம் வந்தன.

இந்நிலையில் மயக்கம் என்ன திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த திரைப்படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் யாமினி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ரிச்சா கருத்து தெரிவித்துள்ளார். அதில், மயக்கம் என்ன ரசிகர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நிஜ வாழ்க்கையில் நான் தான் கார்த்திக். என் கணவர்தான் யாமினி.

நான் என்ன செய்தாலும், எனக்கு அவர் எப்போதும் ஆதரவளிப்பார். இதுவே, வாழ்க்கை துணையை தேடும் ஒவ்வொருவரின் கனவு. இது உங்களுக்கும் கிடைக்கட்டும் என உணர்ச்சிப்பூர்வமாக டுவிட் செய்துள்ளார். தற்போது இந்த ட்விட் வைரலாகி வருகிறது. 

Categories

Tech |