Categories
அரசியல் தேசிய செய்திகள்

பொய்களின் குப்பை…. நாட்டிற்கே சாபம்….. பாஜக மீது மே.வங்க முதல்வர் குற்றசாட்டு…!!

பாஜக பொய்களின் குப்பை என மேற்கு  வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஊரடங்கினால் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதையடுத்து இந்தியாவின் பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் படிப்படியாக நடைபெற தொடங்கிவிட்டன. இதைதொடர்ந்து, மற்ற மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தற்போதே தொடங்கிவிட்டன.

இந்நிலையில் ஆளும் கட்சிகள், எதிர்க் கட்சிகளை குறை கூறுவதும், எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிகளை குறை கூறுவதும் என சுவாரசியமான பல வாக்குவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பாஜக பொய்களின் குப்பை மற்றும் நாட்டின் மிகப்பெரிய சாபம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் தேர்தல் வரும்போதெல்லாம் நாரடா (ஸ்டிங் ஆபரேஷன் ) மற்றும் சாரதா (மோசடி) பிரச்சனைகளை பாஜக கொண்டு வருகிறது. அதற்கு நான் பயப்பட மாட்டேன் என்றார். மேலும் 2021 ஏப்ரல் – மே மாதங்களில் மேற்குவங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories

Tech |