Categories
சற்றுமுன் மாநில செய்திகள் வானிலை

புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிப்பு …!!

”நிவர்” புயல் புதுச்சேரியின் வடக்கே 40 கிலோமீட்டர், கடலூரில் இருந்து 50 கிலோ மீட்டர், சென்னையில் இருந்து 115 கிலோ மீட்டர் தொலைவில் நிபர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும் இடங்களில் 130 கிலோ மீட்டர் முதல் 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகின்றது.

கடந்த ஒரு மணி நேரமாக புயலின் முன் பகுதி கரையை கடந்து வருகின்றது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இன்னும் மூன்று மணி நேரத்தில் புதுச்சேரி அருகே புயலின் மையப்பகுதி கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. நிவர் புயல் கரையை கடந்து வரும் நிலையில் புதுச்சேரி – கடலூர் பகுதியில் அதீத கன மழை பெய்து வருகிறது.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நலன் கருதி புதுச்சேரி முழுவதும் மின் விநியோகம் நிறுத்தபட்டுள்ளது எனவும், புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |