Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மீதமான சப்பாத்தியை வைத்து… எப்படி ஒருரெசிபி செய்யலாமா…!!!

சப்பாத்தி நூடுல்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

சப்பாத்தி                      – 3
வெங்காயம்                – 1
சோயா சாஸ்              – 1/2 டீஸ்பூன்
சில்லி சாஸ்                 – 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி சாஸ்           – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு                               – தேவையான அளவு
எண்ணெய்                  – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி             – சிறிது

செய்முறை:

முதலில் வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு மீதமான சப்பாத்தியை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.

அடுப்பில் கடாயை சாய்த்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் நறுக்கிய வெங்காயம், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், சிறிது உப்பு சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்.

பிறகு அதனுடன் வெட்டியை சப்பாத்தி நூடுல்ஸயும் சேர்த்து குறைந்த தீயில் 2 நிமிடம் வதக்கி மூடி வைத்து, இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இப்போது சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் ரெடி.

Categories

Tech |