தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இது, இன்று மதியம் அதிதீவிர புயலாக வலுப்பெற்று இன்று இரவு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 145 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அத்துடன், தமிழகம், புதுசேரி கடலோர மாவட்டங்களில் அதீத கனமழைக்கும், உள் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிவர் புயல் மீட்பு பணியில் கடற்படைக்கு சொந்தமான சுமித்ரா, ஐஎன்எஸ், ஜோதி கப்பல்கள் ஈடுபட இருப்பதாக கிழக்கு கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக ஐஎன்எஸ் ஜோதி கப்பல் தமிழ்நாடு வந்தடைந்ததுள்ளது.