கடலூரில் புயல் காரணமாக அமைக்கப்பட்டுள்ள ஒரு முகாமில் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
,நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் 50,000 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் புவனகிரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் 30 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இரவு 12 மணிக்கு முகாமிற்கு வந்த பிறகு மாலை 3 மணிக்கு மேலாக உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படவில்லை என வேதனையோடு தெரிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அதனைப்போலவே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் எப்படி முகாமிற்கு வீட்டை விட்டு வருவார்கள் என்ற கேள்வி எழுப்பியுள்ளனர்.