நிவர் புயல் அதிதீவிர புயலாக கடலூரில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் தீவிர புயலாக இருந்த நிலையில் தற்போது அது அதி தீவிர புயலாக வலுப் பெற்றிருக்கிறது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் 220 கிலோமீட்டர் தொலைவிலும், கடலூருக்கு தென்கிழக்கு திசையில் 90 கிலோமீட்டர் தொலைவிலும் தற்போது அதி தீவிர புயலான நிவர் நிலை கொண்டுள்ளது. இது அதி தீவிர புயலாகவே கரையை கடக்கும் என்பதுதான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது இருக்க கூடிய தகவல். அதி தீவிர புயலாக கரையை கடக்கும் பட்சத்தில் 120 இல் இருந்து 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். சமயங்களில் 145 கிலோ மீட்டர் வேகம் காற்று வீசுவதற்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தீவிர புயலாகவே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த தகவல். அதிதீவிர புயலாக கரையை கடக்கும் நேற்று சொல்லப்பட்டு இருந்த நிலையில், தற்போது அதன் தீவிர தன்மை அதிகரித்துள்ளது.வடமேற்கு திசையை நோக்கி 16 கிலோமீட்டர் வேகத்தில் அது நகர்ந்து வருகிறது. முன்னதாக 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது வேகமானது சற்று அதிகரித்திருக்கிறது.
16 கிலோமீட்டர் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. புதுவையில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு தென் கிழக்கு திசையிலும், சென்னையிலிருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 220 கிலோ மீட்டர் தொலைவிலும் அதிதீவிர புயலானது நிலை கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக நகர்த்துகிறது. இன்று நள்ளிரவு நாளை அதிகாலை வரையில் கரையை கடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதி தீவிர புயலாக கரையை கடக்கும் என்பதனால் காற்று அதிகமாக வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல அதீத கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. தஞ்சை திருவாரூர் நாகை கடலூர் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மயிலாடுதுறை பெரம்பலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் திருவண்ணாமலை புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கடலூரில் புயலின் வெளிப்புற பகுதி கரையை தொட்டுள்ளது. மைய பகுதி கரையை தொட 6,7 மணி நேரம் ஆகும். இதனால் தற்போது கடலூரில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது.