Categories
மாநில செய்திகள்

அடி தூள் கிளப்பிய ஈபிஸ் …! ”கண்டிப்பாக தம்பி” சூப்பர் முதல்வர் நீங்க தான் ஐயா …!!

தமிழக அரசின் நிவர் புயல் நடவடிக்கை குறித்தான கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் பதிலளித்து வருகின்றார்.

நிவர் புயல் சற்று நேரத்தில் கரையை கடக்க இருக்கிறது. தற்போது அதனின் வெளிப்புற பகுதி கடலூர் கரையைத் தொட்டு உள்ளது. இதனால் கடலூரில் பலத்த மழை சூறைக் காற்றுடன் வீசுகின்றது. புதுச்சேரி பகுதிகளில் இந்த புயல் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை மாநில அரசுக்கள் மேற்கொண்டு வருகின்றது.

தமிழக முதல்வரும் நேரடியாக களத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்ட நிலையில் முதல்வர் நேரடியாக குடை பிடித்துக் கொண்டு சென்று ஆய்வு நடத்தினார். அங்கிருந்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி உத்தரவுகளை பிறப்பித்தார். தமிழக அரசின் புயல், நிவாரணம், தடுப்பு நடவடிக்கை குறித்த நகர்வுகளை உடனுக்குடன் தமிழக முதலமைச்சர் ட்விட்டர் மூலமாக மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றார்.

அதில் பலரின் கேள்விகளுக்கு பதிலும் அளித்து வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புயலால் விழுந்த மரங்களை அப்புறப்படுத்த பயன்படுத்து வைத்து தொடர்பாக முதலமைச்சர் பதிவிட்ட ஒரு ட்விட்டருக்கு,  ஒருவர் மீண்டும் அந்த மரங்களை அதே இடத்தில் நட வேண்டும் என்ற கோரிக்கைக்கு கண்டிப்பாக தம்பி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகின்றது.

 

Categories

Tech |