குடியரசு தலைவர் பிரதமர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பயணிப்பதற்காக வாங்கப்பட்டுள்ள அதி நவீன ஏர் இந்தியா 1 விமானம் தனது முதல் பயணத்தை தொடங்கி உள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிநவீன விமானத்தை முதல் பயணமாக சென்னை வந்துள்ளார். உலகிலேயே மிக பாதுகாப்பானதாகவும் ஊடுருவ முடியாததாகவும் அமெரிக்காவின் ஏர் போர்ஸ் 1 விமானம் திகழ்கிறது. அது போன்ற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஏர் இந்தியா 1 விமானங்கள் இரண்டை சுமார் 8,500 கோடி ரூபாய் செலவில் இந்தியா வாங்கி உள்ளது. இந்த விமானம் முதன் முதலாக சென்னைக்கு தனது பயணத்தை தொடங்கி உள்ளது. அதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் புறப்பட்டார். இதையொட்டி டெல்லி விமான நிலையத்தில் நடைபெற்ற தொடக்க பூஜையில் அவர்கள் இருவருமே கலந்து கொண்டனர்.
ஏழுமலையான் தரிசனதிற்க்காக ராம்நாத் கோவிந்த் திருப்பதி செல்கிறார். இதையொட்டி அவர் பயணித்த ஏர் இந்தியா 1 விமானம் சென்னை வந்தது. இங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் அவர் திருப்பதி செல்கிறார். ஏர் இந்தியா 1 விமானமத்தில் காண்பிரண்ஸ் ஹால், தங்கும் அறை, சமையலறை, பதுங்கு தளம் ஆகிய வசதிகள் உள்ளன. தொலைபேசி கணினி இணையம் ஆகிய அனைத்து தொலைத்தொடர்பு வசதிகளும் உள்ளன. மேலும் ரேடாரில் தென்படாமல் மறைக்கும் வசதி ஏவுகணை தாக்குதல் முறியடிக்கும் வசதி ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் ஏர் இந்தியா 1 விமானத்தில் இருக்கிறது.