Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

அதி தீவிர புயலாக மாறிய “நிவர்”- சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் ….!!

வழக்கத்தை விட இந்த புயல் தீவிரமாக இருப்பதாக சென்னை எண்ணூர் கடற்கரை பகுதி மீனவர்கள் தெரிகின்றார்கள். எப்போதும் போல இல்லாமல் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிக அளவில் சூறாவளி காற்றுடன் சுழன்று அடிப்பதால் 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று இருப்பதாகவும், கடற்கரையில் நிற்க நிற்க கூட முடியவில்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர். நள்ளிரவு முதல் பயங்கர சத்தத்துடன் கடல் அலைகள் எழும்பி தடுப்புகளை தாண்டி வெளியே அடிப்பதால் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடல் அலைகள் உயர எழும்பி கொந்தளிப்பாக இருப்பதால், தடுப்புக்கு போடப்பட்டுள்ள பாராங்கலை கூட அடித்துச் செல்லக் கூடிய நிலையில் தற்போது காற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கின்றது. மேலும் காற்றின் வேகத்தால் படகுகளை காலையில் இருந்து பாதுகாத்து வந்தாலும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு சேதம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

படகு சம்மந்தப்பட்ட மீன்பிடி பொருட்கள், வளைகள் உள்ளிட்ட வாழ்வாதார பொருட்களை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து வைக்கிறார். ஏற்கனவே பல புயல்களை  பார்த்த எண்ணூர் பகுதி இந்த புயலால் அதிக பாதிப்பை சந்திக்கும் என்று மீனவர்கள் எண்ணுகிறார்கள். எண்ணூர் துறைமுகத்தில் 9ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |