அதி தீவிர புயலாக மாறும் நிவர் தொடர்ந்து வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிலையில் இன்று இரவு கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வரும் நிவர் புயல் கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. தற்போது கடலூருக்கு 290 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 350 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவைக்கு 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை இது கரையை கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கரையை கடக்கும் போது அதி தீவிர புயலாக மாறி புயல் கரையை கடக்கும் என்றும், அப்போது 145 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. நேற்று நள்ளிரவு 11. 30 மணியளவில் தீவிர புயலாக இந்த நிலையில் நிபர் அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, இன்று இரவு காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு இடையே புதுச்சேரி கடற்கரை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.