வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலுக்கு பெயர் சூட்டியுள்ள நாடு ஈரான். நிவர் என்றால் ஈரானிய மொழியில் வெளிச்சம் என்று பொருள். ஏற்கனவே அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து அதி தீவிர புயலாக மாறிய ”கட்டி” சோமாலியாவில் கரையை கடந்தது. அதற்கு இந்தியாதான் பெயர் வைத்தது. வடக்கு இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு 13 நாடுகள் சுழற்சி முறையில் பெயர்களை வைப்பது வழக்கம்.
பங்களாதேஷ், இந்தியா, ஈரான், மாலத்தீவு, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அமீரகம், ஏமன் ஆகிய நாடுகளில் பெயர்களை பரிந்துரை செய்யும். கட்டி புயலுக்கு இந்தியாவும், நிவர் புயலுக்கு ஈரானும் பெயர்களைச் சூட்டி சூட்டியுள்ள நிலையில் அடுத்தது வடக்கு இந்திய பெருங்கடலில் புயல் உருவாவதற்கு மாலத்தீவு பெயர் சூட்டும். இப்படி சுழற்சி முறையில் பெயர் சூட்டப்படுகிறது.