தென் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் நிவர் புயல் நகர்வு குறித்து சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக நண்பகலுக்குள் உருமாறும். 6 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும். நிவர் புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று இரவு கடையை கடக்கும் என தெரிவித்தார்.
அதிகாலை 2 மணிக்கு கடலூருக்கு 310 கிலோ மீட்டர், புதுச்சேரிக்கு 320 கிலோ மீட்டர், சென்னைக்கு 350 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 14 சென்டிமீட்டர் மழை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.