Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கிராமத்து சுவையுடன்…ருசிகரமான… கத்தரிக்காய் மசியல் ரெசிபி..!!

கத்தரிக்காய் மசியல் செய்ய தேவையான பொருள்கள் 

பெரிய கத்தரிக்காய்          – 1
பூண்டு                                      – 4 பல்
இஞ்சி                                       –  சிறிய துண்டு
எண்ணெய்                             – 3 தேக்கரண்டி
உப்பு                                          – தேவையான அளவு
பெரிய வெங்காயம்           – 3
பச்சை மிளகாய்                   – 3
மிளகாய் தூள்                       – கால் தேக்கரண்டி
தக்காளி சாறு                        – 1 கப்
கொத்தமல்லி                       – சிறிதளவு

செய்முறை

முதலில் கத்தரிக்காயை எடுத்து, அதில் கம்பியை வைத்து, அங்கங்கே குத்தி,அதன்  மேல் சிறிது எண்ணெய் தடவி, மைக்ரோ வேவ் ஓவனில்  வைத்து  10 நிமிடம் கழித்து எடுக்கவும். பின்பு பச்சை மிளகாய்,வெங்காயம்,இஞ்சி யை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

அதன் பின்பு ஓவனிலிருந்து வேக வைத்த கத்திரிக்காயை  எடுத்து அதன் தோலை நீக்கி விட்டு, உள்ளிருக்கும் சதையை மட்டும்  ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு மசிக்கவும்.

மேலும் மைக்ரோவேவ் பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி, அதில் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், இஞ்சி போட்டு 2 நிமிடம்  ஹைமைக்ரொ ஹையில் வைக்கவும்.

பின் மசித்த கத்தரிக்காயுடன், மிளகாய்தூள், உப்பு, தக்காளி சாறு சேர்த்து  கலந்து  மைக்ரொ ஓவனில் 8 நிமிடங்கள் சமைத்து, அதன் மேல் கொதத்தமல்லி தழையை தூவி இறக்கி பரிமாறினால் ருசியான கத்தரிக்காய்  மசியல் ரெடி.

Categories

Tech |