கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 8 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தியாவில் டெல்லி கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, மணிப்பூர் போன்ற சிறிய மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள எட்டு மாநிலங்களில் முதலமைச்சர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோதி நேற்று ஆலோசனை நடத்த உள்ளார். காலை 10.30 மணி அளவில் இந்த ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற உள்ளது.