பெற்றோர் ஒருவர் பராபரை வியாதி பாதித்த தங்கள் மகனை காப்பாற்ற போராடும் செயல் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் லூசர்ன் மண்டலத்தில் வசிப்பவர்கள் Zrary குடும்பம். இவர்களுடைய மகன் Danyar(5) என்பவர் பரம்பரை வியாதியுடன் உயிருக்கு போராடி வருபவர். வெறும் மூன்று வருடங்கள் மட்டுமே இனி danyarஆல் உயிர் வாழ முடியும் என்று மருத்துவர்கள் பெற்றோரிடம் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து சிறுவனின் உடல் நிலையில் இந்த திடீர் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக மருத்துவரிடம் அழைத்து சென்ற பெற்றோருக்கு சிறுவனுக்கு ALD எனப்படும் அரியவகை பரம்பரை வியாதி ஒன்று உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து அச்சிறுவனுக்கு மருத்துவர்கள் 2 அல்லது 3 வருடங்கள் மட்டுமே உயிர் வாழ்வதற்கான கால அவகாசம் கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி சிறுவனின் இந்த வியாதிக்கு உலகில் எங்கும் சிகிச்சை இல்லை என்று மருத்துவர்கள் கைவிரித்துள்ளனர். மேலும் சிறுவனின் தாயாரிடம் இருந்து தான் இந்த வியாதி சிறுவனுக்கு பரவியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வியாதி பெண்களை அதிகமாக பாதிக்காது எனவும், பெண்களின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து ஜெர்மனியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் சிறுவனின் வியாதியை குணப்படுத்தலாம் நம்பிக்கை அளித்துள்ளார். ஆனால் அவ்வாறு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தாலும் சிறுவன் நிரந்தரமாக பார்வை இழக்கவோ அல்லது காது கேளாமல் போகவோ வாய்ப்பிருக்கிறது எனவும், பழைய நிலைக்கு திரும்புவது கடினம் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த செயல்முறை மிகவும் ஆபத்தானது என்று சுவிஸ் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்வதால் அதிக ஆபத்து இருக்கின்றது தெரியும். ஆனாலும் எங்கள் பிள்ளையை சாவு கொடுக்க எங்களுக்கு மனமில்லை என்று சிறுவனின் பெற்றோர் மிகுந்த மாணவருத்ததோடு தெரிவித்துள்ளனர்.