Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நிவர் புயல் தீவிரம்… சென்னைக்கு மிக அருகில்… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் சென்னையிலிருந்து 470 கிமீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து நிவர் புயலாக மாறி நாளை கரையைக் கடக்க உள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையிலிருந்து நிவர் புயல் 470 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. மேலும் புதுச்சேரியிலிருந்து 440 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக நிலை கொண்டுள்ளது.

புயலின் வேகம் 15 கிமீ வேகத்தில் இருந்து 4 கிமீ ஆக குறைந்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக மாறுகிறது” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |