தமிழகத்தில் பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் வேல் யாத்திரை பாஜக கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதற்கு பல அரசியல் தலைவர்களும், பொதுமக்களில் சிலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் மற்ற மதத்தினருக்கு இதுபோன்ற அனுமதி வழங்காமல், இம்மாதிரியான யாத்திரைகளை நடத்துவது தமிழகத்திற்கு ஆகாத செயல் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த எதிர்வினை கருத்துக்களுக்கு நேர்மறையான எண்ணங்களை பதில்களை அளிக்கும் விதமாக, பாஜகவின் தலைவர் எல்.முருகன் ஒரு சிறந்த முடிவை எடுத்துள்ளார். அதாவது, நிவர் புயல் காரணமாக வேல் யாத்திரை இரண்டு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவித்த அவர், புயல் தாக்க கூடிய பகுதிகளில் உள்ள பாஜக தொண்டர்கள் மக்களுக்கு உதவுவதற்கு எந்நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். 24, 25-ம் தேதிகளில் வேல் யாத்திரை செல்வதற்கு பதிலாக, நாம் களப்பணி ஆற்ற செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.