வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், உருவான புயல் இன்று மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதனுடைய தாக்கம் தமிழகத்தில் பெரியதாக இருக்கலாம் என்பதால், எச்சரிக்கையாக பொதுமக்கள்
ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நீர் படாத வகையில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.