Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னை வந்த அமித் ஷா… விழாவுக்கு வாசன் போகாதது ஏன்? வெளியான காரணம் …!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர் ஜிகே வாசன் செல்லாதது குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, தாமாக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

ஆனால் தாமாக சார்பில் எந்த ஒரு நிர்வாகியும் பங்கேற்கவில்லை. அமித்ஷாவை வரவேற்க கூட யாருமே இல்லை. இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில், அமைச்சரிடம் பேசி வேண்டிய விஷயங்களை டெல்லியிலேயே எங்கள் கட்சித் தலைவர் ஜிகே வாசன் பேசிவிட்டார். நாங்கள் அதிமுக கூட்டணியில் இருக்கின்றோம். கூட்டணி குறித்து பேசுவதற்கு காலம் அதிகமாக உள்ளது. ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. விழாவில் கலந்து கொள்வதை எல்லாம் ஒரு பிரச்சனையாக பார்க்கக்கூடாது  என தெரிவித்தார்கள்.

Categories

Tech |