Categories
மாநில செய்திகள்

கல்லூரிகளுக்கு கடும் எச்சரிக்கை… அரசின் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அங்கீகாரம் நீட்டிப்பு பெற்ற அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் குறைபாடுகளை சரிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பாதிப்பு குறையும் வரையில் கல்லூரிகள் பிறக்கும் வாய்ப்பு இல்லை என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அங்கீகாரம் நீட்டிப்பு பெற்ற அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ஏஐசிடிஇ சுட்டி காட்டிய அனைத்து குறைபாடுகளையும் விரைவாக சரி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரி செய்யாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கல்லூரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நேரமும் ஆய்வுக்கு வரலாம் என்பதால் விபரங்களை ஒப்படைக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |