Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உடல் எடை அதிகமா இருக்குனு கவலை வேண்டாம்… இந்த டீ பொதும்…!!!

உடல் எடை அதிகமா இருக்குனு கவலை வேண்டாம் இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :

இயற்கையாகவே நம் நாட்டில் விளையும் காய்கறிகளுக்கும் பழங்களுக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் உண்டு. அவற்றில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டு முறையான நேரத்தில் பயன்படுத்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். உடல் எடையை குறைப்பது தான் பலரின் முயற்சி. ஆனால் முறையான கட்டுப்பாடுகள் இல்லாததால் உடல் எடை குறைவதில் முன்னேற்றம் ஏற்ப்படுகிறது இல்லை. இதற்கு ஒரு சரியான தீர்வு நெல்லிக்கனி டீ….

நெல்லிக்காய் டீ தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் பொடி    – 1 டீஸ்பூன்
இஞ்சி துருவல்              – 1 டீஸ்பூன்
மிளகு                                 – கால் டீஸ்பூன்
எலுமிச்சை சாறு         – 1 டீஸ்பூன்
தேன்                                 – 1 டீஸ்பூன்

செய்முறை:
முதலில்  பாத்திரத்தில் இரண்டு கப் அளவு நீர் எடுத்து நன்கு கொதிக்க விடவும். பின்பு நெல்லிக்காய் பொடி, மிளகு, இஞ்சி சேர்த்து நன்கு கொதிக்க விட்டு ஒரு கப் அளவிற்கு வந்த்ததும் இறக்கி விடவும். சூடு குறைந்ததும் வடிக்கட்டி விட்டு அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வர உடல் எடை குறைவத்தில் நல்ல மாற்றத்தை உணருவீர்கள்.

Categories

Tech |