Categories
ஆன்மிகம் ஜோதிடம்

உங்களது பெயரின் முதல் எழுத்து B என்றால்… உங்களது குணநலன்கள் இதோ…!!!

உங்கள் பெயரின் முதல் எழுத்து B யில் தொடங்குகிறதா? அப்போ உங்களுக்கான குணநலன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

B என்ற எழுத்துடன் தொடங்கும் நபர்கள் மிகுந்த உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் எதையுமே வெளிப்படையாக பேச மாட்டார்கள். இவர்களிடம் இருந்து ஒரு வார்த்தை பெறுவதற்கே படாதபாடு பட வேண்டும். மேலும் இவர்கள் உண்மையாக, விசுவாசமாக இருப்பார்கள். இவர்களை நம்பி எந்த காரியத்தை ஒப்படைத்தாலும் நிச்சயம் அதனை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

இவர்கள் பெரும்பாலும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் இருப்பதையே பெரிதாய்  நினைப்பார்கள். அவர்கள் மீது பாசம் காட்டுபவர்களிடம், அதற்குரிய மரியாதையை கொடுப்பவர்கள். அவர்கள் எதையுமே,  அலட்சியப்படுத்த மாட்டார்கள். வேற்று மனிதர்களின் பழக்கத்தை சாராமல், அவர்களது குடும்பத்தை சார்ந்திருப்பது இவர்களுக்கு விருப்பமான ஒன்றாகும். இவர்களிடம் சமையலில் இருந்து அனைத்திழும் ஆர்வம் அதிகமாக இருக்கும். தங்களுடைய உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடிந்தவர்களாக இருப்பார்கள்.

நிதானமாகவும், தங்களை சுற்றி இருப்பவர்களிடம் மிகவும் இணக்கமாக இருப்பவர்கள். முக்கியமாக, இவர்களிடம் உண்மையான நட்பு, அதிகப்படியான அக்கறை கொட்டி கிடக்கும். குறிப்பாக ரொமான்டிக் பெர்சனாகவும், ஆச்சரியப்படுத்தும் வகையிலும் நடந்து கொள்வார்கள். சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் கலங்குவார்கள். மிகவும் சென்சிடிவ் பெர்சனாக இருப்பார்கள்.

இவர்கள் தோல்விகளைக் கண்டு துவண்டு போனாலும், மீண்டும் எழுந்து தன்னால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி செய்து வெற்றி பெறுவார்கள்.

Categories

Tech |