Categories
மாநில செய்திகள்

தொடங்கியது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்… வெற்றி யாருக்கு?… விறுவிறுப்பான வாக்குப்பதிவு…!!!

சென்னையில் இன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று நடந்து கொண்டிருக்கிறது. அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணி அளவில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த வாக்குப்பதிவு மாலை 4 மணி வரையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தேர்தல் நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்காக டிஆர் அணி மற்றும் தேனாண்டாள் முரளி அணிக்கு இடையே போட்டி நிலவி கொண்டிருக்கிறது. இவர்களைத் தவிர தலைவர் பதவிக்காக தேனப்பன் சுயேட்சையாக போட்டியிடுகின்றார்.

மேலும் துணைத் தலைவர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்காக பலரும் களத்தில் இருக்கின்றனர். இவர்களைத் தேர்ந்தெடுக்க 1303 உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள். இந்த வாக்குப்பதிவு முடிவடைந்தவுடன் வாக்குகள் உடனடியாக எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |