Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு… அரசு புதிய அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதிங்க…!!!

நாடு முழுவதிலும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பல மாநிலங்கள் பள்ளிகளை திறந்தன. அதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் தேசிய திறனாய்வு தேர்வு டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு பத்தாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான விண்ணப்பங்கள் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் வருகின்ற 30ஆம் தேதி வரை தரவிரக்கம் செய்யலாம். மேலும் விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் 50 ரூபாய் சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளது.

Categories

Tech |