கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய இனிமேல் இயந்திரங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்வது மிகவும் கடினமான வேலையாக உள்ளது. அந்த வேலையில் ஈடுபட்டு சிலர் தங்கள் உயிரை பறி கொடுத்துள்ளனர். அதனால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு, செப்டிக் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு இனிமேல் இயந்திரங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் புதிய சட்டத்திருத்தம் இயற்றியுள்ளது.
மேலும் மனித கழிவுகளை அகற்றுவதில் இனிமேல் மனிதர்களை ஈடுபடுத்தினால் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்று சட்டத்தில் இடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மனிதர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த சட்டத் திருத்தத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.