Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள்… பொதுமக்களுக்கு ஆபாய எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு அதீத கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் இருக்கும் பெரும்பாலான ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 நாட்களுக்கு நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

மேலும் உள் மாவட்டங்களான திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |