Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிற்கு வேறு வழியில்லை’- அதிமுக-பாஜக கூட்டணி குறித்து வைகோ

வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி படு தோல்வி அடையும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், அவர்களுக்கு வேறு வழி இல்லை. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் அதிமுக – பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு தொடரும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதற்கு முன்னாடி திமுக என்ன செய்தது ? திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று கேட்டார் ? ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் வேளாண்மை மண்டலம் பழக்கப்போகிறது. இப்படி ஒரு பெரிய துரோகத்தை மத்திய அரசு செய்து கொண்டு இருக்கின்றது.

மூன்று நாட்களுக்கு முன்பு கர்நாடகாவின் நீர்வளத்துறை அமைச்சர் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து விட்டு, எங்களுக்கு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு முழு தரும் என்று மத்திய அமைச்சர் சொன்னதாக அறிவித்துவிட்டார். இதைவிட துரோகம் தமிழ்நாட்டுக்கு வேற யாரும் துரோகம் செய்ய முடியாது. இப்படி பச்சைத் துரோகத்தை தமிழ் நாட்டுக்கு செய்துவிட்டு தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியிலிருந்து எப்படி ஓட்டு கேட்க முடியும்?

இதுவே ஒரு ஊழல் ஆட்சி. ஒரு விவசாயி குடும்பத்திற்கு 6,000 ரூபாய் கொடுத்ததாக பேசினார். அதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்து இருக்கு ? எவ்வளவு பெரிய மோசடி நடந்து இருக்கு ? எத்தனை கோடிகள் ஊழல் நடந்திருக்கு ?  ஆக இது முழுக்க முழுக்க ஒரு ஊழல் ஆட்சி தான். வருகிற தேர்தலுக்காக அவர் பேசி விட்டுப் போகலாமே தவிர,  படு தோல்வி அடைவார்கள். திமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் இதுதான் நடக்கப் போகுது என வைகோ தெரிவித்தார்.

Categories

Tech |