இந்தியா நாட்டில் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சி சமீப ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வந்த போதிலும், ஒரே ஒரு அவல நிலைக்கு மட்டும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரிய ஒரு விஷயமாகவே இருந்தது. எதற்கு தொழில்நுட்பம் வருகிறதோ ? இல்லையோ? இதற்கு கட்டாயம் வரவேண்டும் என பல ஆண்டுகளாக இதற்கான குரல்களும் நம் நாட்டில் ஒலித்துக் கொண்டு வந்தன.
அதாவது செப்டிக் டேங்க் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களையே பயன்படுத்தி வந்த நிலையில், இனிமேல் இயந்திரங்களை மட்டுமே கட்டாயம் இது போன்ற வேலைகளுக்கு பயன்படுத்த வேண்டுமென மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் புதிய சட்டத்திருத்தம் இயற்றியுள்ளது.
மனித கழிவுகளை அகற்றுவதில் இனிமேல் மனிதர்களை பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கவும் சட்டத்தில் இடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த சட்டத் திருத்தத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.