நேற்றைய விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆங்கிலத்தில் பேசி அசத்தியத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டு ரசித்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் அதை முழுமையாக தடுக்க அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும். பிரதமர் அவர்கள் இன்றைக்கு ஒரு கடுமையான சோதனையான தருணத்தில் நாட்டு மக்களுடைய ஒத்துழைப்போடு மிகத் திறமையாக வல்லரசு நாடுகளே பாராட்டுகின்ற அளவுக்கு ஆட்சி செய்கின்றதை நாம் பார்க்கின்றோம்.
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நோய் பரவலை இன்றைக்கு அல்லும் பகலும் பாராமல் உழைத்து நோய் பரவலை தடுப்பதற்காக கடுமையாக முயற்சி செய்து வருகின்றார் பாரதப் பிரதமர். ஆகவே அவருடைய கடுமையான முயற்சிக்கு தமிழகம் எப்போதும் துணை நிற்கும் என்பதை நேரத்தில் தெரிவிக்க விரும்புகின்றேன்.
பாரதப்பிரதமர் திட்டங்களை மிகச் சிறப்பாக இன்றைக்கு செயல்படுத்தி, இன்றைக்கு வல்லரசு நாடு என இந்தியா இடம் பெறுகின்ற அளவிற்கு வளர்ந்து வருவதை நாம் பார்க்கின்றோம். எனவே இன்றைக்கு வல்லரசு நாடுகளும் பாராட்டுகின்ற அளவுக்கு இந்தியா வளர்ந்திருக்கின்றது என்று சொன்னால் என்றால் பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமைச்சர்களும் எடுத்த முயற்சி தான் காரணம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கின்றேன்.
நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடரும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பத்தாண்டு காலம் சிறப்பான ஆட்சி தந்திருக்கிறது. பல்வேறு திட்டங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு தந்திருக்கின்றது. இன்றைக்கு தேசிய அளவில் பல்வேறு விருதுகளை நாங்கள் பெற்றிருக்கின்றோம். எல்லா துறைகளிலும் சாதனையை குவித்துக் கொண்டிருக்கின்றோம். அந்த அளவுக்கு சிறப்பான ஆட்சி தமிழகத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மீண்டும் வருகின்ற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் எங்களுடைய கூட்டணி அதிக இடங்களில், பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று கழக ஆட்சி அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என பழனிசாமி பேசினார். இதனிடையே தமிழக முதல்வர் பழனிச்சாமி பேசும், ஒவ்வொரு வார்த்தைக்கும் ஆங்கில மொழியாக்கம் செய்து கொண்டே பேசி அசத்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆங்கிலம் பேசுவதை மேடையிலிருந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா உன்னிப்பாக கண்டு ரசித்தார்.