Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் பப்பாளி விளைச்சல் அதிகரிப்பு – விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொடர் மழையால் பப்பாளி விளைச்சல் அதிகரித்தும் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் போதிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 

உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பப்பாளி  பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் சாரல் மழை பெய்து வருவதால் பப்பாளி விளைச்சல் அதிகரித்து பப்பாளிப்பழம் பழுக்க  தொடங்கியது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு பப்பாளி ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு கிலோ 5 முதல் 7 ரூபாய் வரை மட்டுமே விற்பனை ஆவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |