Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் – விவசாயிகள் வேதனை

கூடலூர் அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மற்றும் கிழங்குகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டிட  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கைமாகொல்லி பகுதியில்  விவசாயிகள் நெல்பயிர் மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவை விவசாயம் செய்து வருகின்றனர். அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அப்பகுதிக்கு வரும் இரண்டு காட்டு யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதனால் தங்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதாக வேதனையுடன் கூறும் விவசாயிகள் உடனடியாக யானைகளை காட்டீற்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |