Categories
மாநில செய்திகள்

பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய காசி வழக்கு – காசியின் தந்தை மீதும் வழக்கு பதிவு

பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காசி தடயங்களை அழித்ததாக மேலும் மூன்று வழக்குகளில் காசியின் தந்தை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

பெண்களை பாலியல் வன்முறை செய்து அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படும் நாகர்கோவிலைச் சேர்ந்த காசியை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காசியின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் போது லேப்டாப், ஹார்ட்டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்த தடயங்களை அழித்தாக காசியின் தந்தை தங்கபாண்டியனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில காசியின் தந்தை தங்கபாண்டியன் நடத்தி வரும் கோடி கடையில் இருந்து போலீஸரால் கைப்பற்றப்பட்ட ஹார்ட்டிஸ்கில் மேலும் பல ஆவணங்கள் அழிக்கப்பட்டதால் அவை சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் திரும்பப் பெறப்பட்டன.

இதனையடுத்து ஆவணங்களை அழித்ததாக மேலும் 3 வழக்குகளின்கீழ் தங்கபாண்டியன் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் காசியின்  நண்பரையும் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Categories

Tech |