நெல்லை ,சேரன்மாதேவியில் பெண்ணிடம் 6 பவுன் செயினை , பட்டப்பகலில் மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியிலுள்ள வைத்தி மேல வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்,பால் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி தங்கம் ,சேரன்மாதேவி பேருந்துநிலையம் அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் பணியிலுள்ள நிலையில், மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு நடந்து வந்துள்ளார்.

அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசில் புகார் அளிக்கபட்டடுள்ளது .